இங்க எங்க வீட்ல மொத்தம் 5 பேர் ஒன்னா இருக்கோம். அருணாச்சலம், மதன், ஸ்ரீபத், ஸ்ரீனாத், நான். மதனுக்கு ஒரு நல்ல பழக்கம். காலைல எழுந்த உடனேயே பசியை போக்கிக்குவான். 7:30/8:00கு எழுந்து, பால் காய்ச்சி காபி குடிச்சிடு, அதுக்கப்பறம்தான் மறுவேலையே பாப்பான்.. அன்னைக்கும் இதே மாதிரிதான், எழுந்து பாலை பார்த்தவன், "என்னடா பால்ல ஆடை கட்டி இருக்கு?! நமக்கு முன்னே எவனோ காய்ச்சிட்டானோ"ன்னு தொட்டு பாத்துருக்கான்.. பால் ஆறிதான் இருந்துருக்கு.. சரி, கொஞ்சமா ஆடைய எடுத்து ருசித்தவன், "என்னமோ தெரியல, என்னோட நாக்கு சரிரில்ல.. பால் எங்கையாவது புளிக்குமா" னு சொல்லிட்டு, பால நல்லா சுடவச்சு, கொதிக்கவிட்டு இறக்கி, அருணுக்கும் தனக்கும் காபி போட்டு கொண்டுவந்து அருண் கிட்ட கொடுத்துருக்கான். ரெண்டு பேரும் காபியை குடிச்சிட்டு, என்னடா இது, சக்கரை பத்தலையோ.. காபி புளிக்கர மாதிரி இருக்குதேனு discuss பண்ணிருக்காங்க.. நம்ம அருண்தான் smartஆ யோசிச்சு, "அடடா, பால் புளிச்சிருச்சுங்க... அது தெரியாம காபி போட்டுடீங்களே" னு சொல்லி இருக்கான்.. ஹ்ம்ம்... புளிச்ச பால வச்சுட்டு என்ன செய்றது... தூக்கி கொட்டுங்கனு சொல்லிட்டு கொட்டியாச்சு...
ராத்திரி ஒரு 9:30.. எனக்கு செம பசி.. heavy workout முடிச்சிட்டு பசியோட சமையல்காரம்மா என்ன செஞ்சு வச்சுருக்காங்கன்னு ஆசையா பாத்தா, காரமா புளிக்குழம்பு... எனக்கு சுத்தமா பிடிக்காது... எப்பவாவது ருசிக்காக சாப்பிடலாம்.. வாரம் ரெண்டு முறை புளிக்குழம்புன்னா எனக்கு சுத்தமா பிடிக்காது.. பருப்பு போட்டு சாம்பார் வச்சு சாப்டாதான் அது நல்ல சாப்பாடு.. கூடவே தயிர் இருந்தா அம்ருதம்தான்.. சந்தோஷமான, திருப்தியான சாப்பாடுதான்.. ஆனா சிங்கைல எங்கையுமே தயிர் கிடைக்கறது இல்ல.. வெறும் yogurtதான்.. சப்புனு இருக்கும்.. காலைல பழைய சாதம் சாப்பிட புளிச்ச தயிர்தான் சரியான சேர்க்கை.. மகனே, yogurt சாப்டு சாப்டு நாக்கு செத்து போனதால, போன மாசம் ஊருக்கு போயிருந்தப்ப அம்மா கொடுத்துவிட்ட தயிரை சும்மா சூப்பரா புளிக்கவிட்டு அதயே புரை ஊத்தி ஒவ்வொருநாளும் தொடர்ச்சியா பயன்படுத்திட்டு வந்தோம். இப்படி சந்தோஷமா போய்க்கிட்டு இருந்த என்னோட தயிர் வாழ்க்கைல ஒரு tragedy!!
புளிக்குழம்ப பாத்து tension ஆன நான், தயிர்சாதம்+கடாரங்கா ஊறுகாய் மட்டும் சாப்டுட்டு படுக்கலாம்னு சொல்லிட்டு போய் தயிரை தேடினா, தயிரைக்கானோம்.. என்ன கொடுமை சரவணன்! "டேய் பசங்களா, தயிர் எங்கடா காணோம்?! fridge லையும் இல்லையே.." னு கேட்டுட்டு hallகு வந்தேன்.. "தெரியலைங்க.." னு பதில்.. சரி.. தயிர் புரை ஊத்தின பாத்திரத்தை மனசுல கொண்டு வந்து அது எங்கன்னு தேடினா, சும்மா பள பளன்னு மின்னிட்டு இருக்கு... "டேய்.. யார்ரா தையிரை காலி செஞ்சது?! இன்னைக்கு காலைல கூட நான் சாப்டவே இல்லையே.. அப்ப்றம் அந்தம்மா எப்படி பாத்திரத்த கழுவி வெச்சாங்க"னு கேட்டேன்... ரெண்டு பேர் மட்டும் பேந்த பேந்த முழிச்சானுங்க......
அடப்பாவிங்களா... தயிரைக் கொதிக்க வெச்சது மட்டுமில்லாம, அதுல காபி போட்டு குடிச்சிட்டு, அட, சக்கரைபத்தாம தான் புளிக்குதுனு நினச்சு.. அப்பறமா அது கெட்டு போச்சுனு முடிவுகட்டி அதைத் தூக்கி கொட்டின முதல் தெய்வங்கள இப்போதான்டா பாக்கறேன்...!! :-))
This is my first post with local tamil slang (பேச்சுத் தமிழ்)... please bear with me.. :P